உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மழைநீர் செல்வதால் மக்கள் பீதி

பள்ளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மழைநீர் செல்வதால் மக்கள் பீதி

அரவக்குறிச்சி: குழாய் பதித்து மூடப்பட்டுள்ள மண், மழை நீரால் சரிந்து பள்ளமாகி உள்ள நிலையில் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக, காவிரி நீரை, 250 கி.மீ., தொலைவில் கொண்டு செல்வதற்காக குழாய் பறிக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இவற்றில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு, பள்ளங்கள் மூடப்படுகிறது. இப்பணி ராஜபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், மூடப்பட்டுள்ள பள்ளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மழைநீர் செல்வதால் புதை மணல் போல் ஆகி, சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை பீதி அடைய செய்துள்ளது.நெடுஞ்சாலை துறையினர் இதை கவனத்தில் கொண்டு, மழையால் ஏற்பட்ட பள்ளங்களில் மண் அரிப்பு ஏற்படாமல், மண்ணை போட்டு நிரப்ப வேண்டும். குழாய் பதிக்கும் பணி, ஓராண்டாக நடந்து வருவதால், விரைந்து முடிக்க மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை