உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளால் மக்கள் அவதி

அரவக்குறிச்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளால் மக்கள் அவதி

அரவக்குறிச்சி, டிச. 20-அரவக்குறிச்சியில், ஓராண்டுக்கும் மேலாக ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அரவக்குறிச்சியின் முக்கிய சாலைகள் ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில், கழிவுநீர் கால்வாய் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய அளவு பாதை அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் சாலையில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருவதால், வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் பஸ்கள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலை வழியாக அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே நின்று செல்கிறது. இதனால் நகருக்குள் செல்ல, இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. காலையில் அலுவலகத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மாணவர்கள், பயணிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலை துறையினர் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ