உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடசேரி கிராமத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவஸ்தை

வடசேரி கிராமத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவஸ்தை

வடசேரி கிராமத்தில் அடிப்படைவசதியின்றி மக்கள் அவஸ்தைகரூர், டிச. 1-வடசேரி பஞ்சாயத்தில், அடிப்படை வசதியில்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சிக்குட்பட்ட வடசேரி பஞ்சாயத்தில், 7,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல இடங்களில் சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியவில்லை. இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், கழிவு நீர் செல்ல கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கழிவுநீர், சாலையில் ஆறு போல ஓடுகிறது. மழை காலத்தில் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால், நடந்து செல்ல கூட சிரமப்படுகின்றனர். மேலும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.குப்பை அள்ளப்படாமல் பல இடங்களில் தேங்கி உள்ளது. இப்பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால், பஸ்களில் செல்ல வெகு துாரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. குடிநீர் போதுமான அளவில் வருவது கிடையாது. கோடை காலத்தில் நீண்ட துாரம் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டி உள்ளது.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி