மேலும் செய்திகள்
துாய்மை பணிகள் மும்முரம்
17-Sep-2025
கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் அடுத்து மகாதானபுரம் நெடுஞ்சாலை பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து, கரூர், திருச்சி செல்வதற்காக மகாதானபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் தினமும், 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சில நாட்களாக, இரவில் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் எரிந்த மின் விளக்குகள் தற்போது பழுதாகி கிடக்கின்றன. இதனால், பஸ் ஸ்டாப் பகுதியில், இரவில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகின்றனர். மேலும், டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே, இந்த பஸ் ஸ்டாப் பகுதியில் பழுதாகி எரியாமல் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
17-Sep-2025