உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

கழிவுநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, சின்னதாராபுரத்தில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில், கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரம் பகுதியில் இருந்து, தென்னிலை செல்லும் சாலையில் தினமும் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்கள், கார்களில் சென்று வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய் உடைந்ததால், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதுடன், தொடர்ந்து வழிந்தோடுகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கழிவுநீரில் சறுக்கி, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உடைந்துள்ள கழிவுநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை