மேலும் செய்திகள்
நாய்களை கட்டுப்படுத்த கோரி மனு வழங்கல்
24-Jun-2025
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் ஆமை வேகத்தில் நடந்துவரும் கழிவுநீர் வடிகால் பணியால், கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் ஷா நகர் முதல் ஷபியா நகர் வரை, கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி, கடந்த, இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. அப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணல், கற்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், முறையாக கழிவுநீரை வெளியேற்றி பணி செய்யாததால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கொசு அதிகளவில் உற்பத்தியாகி, தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம், கழிவுநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Jun-2025