உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிப்பிடத்தை திறக்க மக்கள் எதிர்பார்ப்பு

கழிப்பிடத்தை திறக்க மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், :கரூர் அருகே, பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி, தான்தோன்றிமலையில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள், வசதிக்காக தான்தோன்றிமலை மயானம் அருகே, பல ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களாக கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை