உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பேரூர் மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்

பேரூர் மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்

குளித்தலை : குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., பேரூர் உடையாபட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழாவில், பஞ்சாயத்தின் எட்டு கிராம மக்கள் சார்பாக, கடந்த வாரம் காப்பு கட்டி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கப்பட்டது. அன்று முதல், 15 நாட்கள் இப்பகுதியினர் விரதம் இருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு கிராம மக்கள் சார்பாக, பல்வேறு மலர்களை கொண்டு பூச்சொரிதல் விழாவும், மண்டகப்படி விழாவும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்று முன்தினம் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடங்களை தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் எடுத்து வந்தனர். பின்னர், அம்மனுக்கு பால், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, தேன், திருமஞ்சனம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்று, முக்கிய வீதிகள்வழியாக சுவாமி திருவீதி உலா வந்தது.இரண்டாம் நாளான நேற்று காலை, 1,008 சிலா போடுதல், அக்னி சட்டி எடுத்தல், தேவராட்டம் போன்ற பல்வேறு நேர்த்திகடன் செய்து அம்மனை வழிபட்டனர். இன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் தரம் குத்துதல், படுகளம் விழுதல் மற்றும் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறும். தொடர்ந்து மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்து விடுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகாமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி