உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா பத்திரிக்கையில் சமூக பிரிவு பெயர் நீக்க கோரி மனு

ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா பத்திரிக்கையில் சமூக பிரிவு பெயர் நீக்க கோரி மனு

கரூர், குளித்தலை, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கையில், சமூக பிரிவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்க வேண்டும் என, தமிழர் தேசம் கட்சி, கரூர் கிழக்கு மாவட்ட செயலர் அருள்ராஜ் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 14ல் நடக்கிறது. இதற்காக, ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில், கும்பாபிஷேக விழா பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் உபயதாரர்கள் என, இரண்டு சமூக பிரிவுகளில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், அதில் ஜமீன்தார் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. இது விதிகளை மீறிய நடவடிக்கையாகும். சமூக பிரிவு பெயர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது, சட்டத்திற்கு விரோதமான செயலாகும். கும்பாபி ேஷக பத்திரிக்கையில் உள்ள சமூக பிரிவு பெயர்களை நீக்கப்பட்டு, மீண்டும் பத்திரிக்கை அச்சடிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !