உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடுதல் விநாயகர் சிலை அமைக்க கோரி மனு

கூடுதல் விநாயகர் சிலை அமைக்க கோரி மனு

கரூர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் கூடுதல் விநாயகர் சிலைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என, சிவசேனா மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் வந்தவர்கள், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கூடுதல் இடங்களில், விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி தர வேண்டும். பின்னர், விசர்ஜனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி சிலைகள் வைக்கப்படும். கூடுதல் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ