மகள் சிகிச்சைக்கு உதவி கேட்டுகரூர் கலெக்டரிடம் மனு
மகள் சிகிச்சைக்கு உதவி கேட்டுகரூர் கலெக்டரிடம் மனுகரூர்:மகள் சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என, கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த நாராயணசாமி என்பவர், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது: எனது, 6 வயது மகள் சம்யுக்தா உடல் பாதிப்பு காரணமாக, படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேல் சிகிச்சை பெற திருநெல்வேலியில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். எனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. மேல் சிகிச்சைக்கு செலவு செய்ய வசதியில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், நிதி உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.