உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம் மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம் மனு

அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஷாம் நகர் டி-4 கிராஸில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:இப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, கான்கிரீட் சாலை அமைக்கும் போது கால்வாய் உயரமாகவும், வீடுகள் தாழ்வாகவும் உள்ளதால், மழை காலங்களில் வீடுகளில் கழிவுநீர் புகுந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையை பறித்து விட்டு கால்வாய் மட்டத்திற்கு சீரமைத்து அமைத்து தர வேண்டும். மேலும், இப்பகுதியில் தினசரி குடிநீர் வினியோகம் சரியாக நடைபெறவில்லை. கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை