உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிரஷர் பொருட்கள் விலை உயர்வு பைப் உற்பத்தியாளர் சங்கம் மனு

கிரஷர் பொருட்கள் விலை உயர்வு பைப் உற்பத்தியாளர் சங்கம் மனு

கரூர்: கிரஷர் பொருட்களின் விலை உயர்வை, திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ஆர்.சி.சி., பைப் உற்பத்தியாளர் சங்கத்தினர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் சிமென்ட் குழாய் (ஆர்.சி.சி., பைப்) தயாரிக்கும் நிறுவனங்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவல், உலக அளவில் பல்வேறு போர்கள் காரணமாக மூலப்பொருட்கள் ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது மெல்ல, மெல்ல தொழில் மீண்டு வரும் நிலையில், விலை உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தொழிலை நம்பி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளனர். எனவே, கிரஷர் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை