உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்

மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்

கரூர்: கரூர் அருகே, மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்- திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டை பகுதியில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக, மின் கம்பத்தில் அதிகளவில் செடிகள் முளைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின் வாரிய ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை. மேலும், பழுதான நிலையில் உள்ள சிமென்ட் கம்பம், கீழே விழும் பட்சத்தில், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால், கரூர்-திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடிகளை அகற்றி, சேதம் அடைந்த நிலையில் உள்ள, சிமென்ட் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை