கரூர் எஸ்.பி., யிடம் பா.ம.க., மா.செயலாளர் புகார் மனு
கரூர், பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட பா.ம.க., செயலர் பாஸ்கரன், எஸ். பி., ஜோஸ் தங்கையாவிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:பா.ம.க., இணை பொதுச்செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வுமான அருள் மீது கடந்த, 4 ல் சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும். சமூக ஊடகங்களில் கலவரத்தை துாண்டும் விதமாக, பதிவிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.