உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உரிமம் இல்லாத பட்டாசு கடை போலீசார் வழக்குப்பதிவு

உரிமம் இல்லாத பட்டாசு கடை போலீசார் வழக்குப்பதிவு

குளித்தலை,குளித்தலை பகுதியில், உரிய அனுமதியில்லாமல் பட்டாசு விற்பனை செய்தவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்யதனர்.குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மயிலாடும்பாறையை சேர்ந்தவர் பெரியசாமி, 54. இவர் பணிக்கம்பட்டி சந்தையில், அரசு அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தார். இதேபோல் அதே பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அப்துல்கான், 57, என்பவரும் மற்றும் பணிக்கம்பட்டி சந்தையை சேர்ந்த தங்கம், 74, என்பவரும் அனுமதி இல்லாமல் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வெடி பொருட்கள், பட்டாசுகளை விற்பனை செய்தனர். இவர்கள் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ