உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மருத்துவமனைக்கு ரூ.3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடத்துக்கு பூஜை

அரசு மருத்துவமனைக்கு ரூ.3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடத்துக்கு பூஜை

கரூர், கரூர் மாவட்டம், மண்மங்கலம் அரசு மருத்துவமனையில், கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மண்மங்கலம் அரசு மருத்துவமனையில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இதில், கூடுதல் கட்டடம் தரை தளம், 371 ச.மீ., பரப்பளவும், முதல் தளம் 371 ச.மீ., பரப்பளவிலும் என மொத்தம், 742 ச.மீ., பரப்பளவில் கட்டப்படவுள்ளது. தரைத்தளத்தில் பொது ஆய்வகம், மருந்தகம், ஆண்கள் புற நோயாளிகள் பிரிவு, ஆண்கள் ஊசி போடும் அறை, மருத்துவ பரிசோதனை அறை, பெண்கள் புற நோயாளிகள் பிரிவு, பெண்கள் ஊசி போடும் அறை, தொற்றா நோய் பிரிவு, பல் மருத்துவ புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் அறை மற்றும் நோயாளிகள் காத்திருப்பு அறை, பொது கழிப்பறை, தாழ்வாரம் மேலும் மின் துாக்கி அமைக்கப்படும். முதல் தளத்தில் ஆலோசனை மையம், தலைமை மருத்துவர் அறை, பணி மருத்துவர் தங்கும் அறை, செவிலியர் கண்காணிப்பாளர் அறை, நிர்வாக அலுவலகம், ஆவணங்கள் பாதுகாப்பு அறை மற்றும் மருத்துவ ஆவணங்கள் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ., கண்ணன், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) செழியன், உதவி பொறியாளர் பிரதீப் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி