உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் அருகே பூக்குழி திருவிழாஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்கரூர், டிச. 2-கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோவிலில், ஐயப்ப சேவா சங்கம் அறக்கட்டளை மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் கடந்த, 26ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பூக்குழி திருவிழா தொடங்கியது. கடந்த, 28ல் ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நெய்விளக்கு ஏற்றுதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூக்குழியில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் இறங்கினர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ