உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மானிய விலையில் பவர் டில்லர்: கலெக்டர் அழைப்பு

மானிய விலையில் பவர் டில்லர்: கலெக்டர் அழைப்பு

கரூர், டிச. 14-கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழக வேளாண் பொறியியல் துறை மூலம், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக, 1.20 லட்சம் ரூபாய், விசைக்களை எடுப்பான்களுக்கு அதிகபட்சமாக, 63 ஆயிரம் ரூபாய் அல்லது கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு, அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில், 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபரம் பெற, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை அல்லது வட்டார அளவில் உதவிபொறியாளர், இளநிலை பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை