உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனாருக்கு போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனாருக்கு போக்சோ

குளித்தலை: குளித்தலை அடுத்த இரணியமங்கலத்தை சேர்ந்தவர், 15 வயது சிறுமி; இவரது தாய் இறந்து விட்டதால், பாட்டி வீட்டில் தங்கி, டெக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.அருகிலுள்ள கிராமத்தில் வசித்து வரும் அத்தை வீட்டிற்கு, கோவில் திருவிழாவிற்காக சிறுமி சென்றுள்ளார். அப்போது, நாகேந்திரன், 19, என்ற கொத்தனாருடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்-பட்டு, கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய நாகேந்-திரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதில் சிறுமி, இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். உடல்-நிலை சரியில்லாததால், பாட்டியை அழைத்துக்கொண்டு குளித்-தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை-யடுத்து சிறுமியின் பாட்டி, குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி, நாகேந்திரன் மீது போக்சோ சட்-டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை