உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

குளித்தலை : குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது . பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதேபோல் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை