மேலும் செய்திகள்
திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
29-Nov-2024
கரூர்: ''வெள்ளம் ஏற்படும் போது, முன்னேற்பாடு அவசியம்,'' என, அதிகாரிகளுக்கு கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி திட்-டப்பணிகள் குறித்து, ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. பின், அவர் கூறியதா-வது:வானிலை மையம் சார்பில், கரூர் மாவட்டத்திற்கு இன்று (12ம் தேதி)கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ-மழை தீவிர மடையும் என்பதால், அனைத்து நீர் நிலைகளின் இருப்பு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில், 2 லட்சம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றில், 1 லட்சம் கன அடி தண்ணீரும் வரும்போது, இரண்டு ஆறுகளும் ஒன்று சேரும் இடத்தில், அருகாமையில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கான முன்னேற்பாடு நடவடிக்-கைகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், எவ்வளவு நீர் வெளியேற்றப்-படும் போது, எந்தெந்த பகுதிகள் பாதிப்பு அடைந்தது என்பதை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினார். முன்னதாக, கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்-நிலைப் பள்ளியில், 2.45 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்ப-றைகள் கட்டும் பணி, அறிவுசார் மையத்தையும் ஆய்வு செய்தார்.கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
29-Nov-2024