உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்க நாள் கொண்டாட்டம்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்க நாள் கொண்டாட்டம்

கரூர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இயக்க நாளையொட்டி, கரூர் அரசு ஊழியர் சங்க கட்டடம் முன், கொடியேற்று விழா நடந்தது.மாநில செயலாளர் ஜெயராஜ் கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் தமிழரசி உள்ளிட்ட, நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல், தான்தோன்றிமலையில் நடந்த கொடியேற்று விழாவில், வட்டார தலைவர் பூபதி, மாவட்ட செயலாளர் அமுதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மேலும், கடவூரில் மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி தலைமையிலும், க.பரமத்தியில் அமைப்பாளர் கஜேந்திரன் தலைமையிலும், தோகமலையில் வட்டார தலைவர் ரஞ்சித்குமார் தலைமையிலும், கிருஷ்ணராயபுரத்தில் வட்டார செயலாளர் மனோகரன் தலைமையிலும், குளித்தலையில் அமைப்பாளர் தேவகி தலைமையிலும் கொடியேற்றப்பட்டது. பிறகு, இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை