உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் கரூர், தலைமை தபால் நிலையம் முன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். தொடக்கக் கல்வித்துறையில் பொது கலந்தாய்வு அறிவித்து விட்டு, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆணைகளை ரத்து செய்து விட்டு, இந்த தவறுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைந்து முடிந்து, பதவி உயர்வு கூடிய கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத் தலைவர்கள் சத்திமூர்த்தி, செல்லமுத்து, உண்ணாமலை, மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ