உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் கல்லுாரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

தனியார் கல்லுாரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

குளித்தலை,: குளித்தலை அடுத்த கீரனுார் பஞ்., குன்னுடையான் கவுண்டன்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம், 55; போஸ்ட் மாஸ்டர். இவரது மகள் பவதாரணி, 20; திருச்சி தனியார் கல்லுா-ரியில், பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த கிறிஸ்-துமஸ் பண்டிகை விடுமுறைக்கு மாணவி பவதாரணி, சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டிலிருந்து காணவில்லை.அக்கம் பக்கம் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றின் திட்டில், மாணவி பவதாரணியின் காலணி கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த மாணிக்கசுந்தரம், முசிறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். பின் சிறிது நேரத்தில், மாணவி பவதாரணியை சடலமாக மீட்டு மேலே கொண்டுவந்தனர். இதுகுறித்து, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை