மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி வரையறை ஆலோசனை கூட்டம்
11-Sep-2025
கரூர் :கரூர் நகர மா.கம்யூ., கட்சி சார்பில், நகர செயலர் தண்டபாணி தலைமையில், கரூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.மனுவில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்கள், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ேஹாசுமின், சுப்பிரமணியன், ராஜேந்திரன், சிவக்குமார், சசிகலா, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.* இதேபோல், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலர் தர்மலிங்கம் தலைமையில், கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா, கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு அங்கு வாசிப்பதற்கான உத்தரவாதம் கொடுக்கும் வகையில் மக்களுக்கு பட்டா வழங்க கோரி கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன், மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் கவிவர்மன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், வக்கீல் சரவணன், நிர்வாகிகள் நாகராஜன், சுப்பிரமணியன், கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
11-Sep-2025