மேலும் செய்திகள்
முத்தனேந்தலில் எரியாத உயர் மின்கோபுர விளக்கு
30-Sep-2024
உயர் கோபுர மின்விளக்கு அமைக்கரூ.24.55 லட்சம் நிதி உதவி வழங்கல்கரூர், அக். 18-புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க, 24.55 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.கரூர் மாவட்டம் புகழூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தில், உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். புகழூர் நகராட்சிக்குட்பட்ட சேலம்,- கரூர் தேசிய நெடுஞ்சாலையில், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் கந்தசாமிபாளையம் (கட்டிபாளையம் பிரிவு சாலை) வரை, 1,500 மீட்டர் நீளமுள்ள சாலைகளின் மையப்பகுதியில், 25 மீட்டருக்கு ஒரு உயர் கோபுர மின்விளக்கு வீதம், 60 உயர் கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்காக, சாலையின் இருபுறமும், 260 மகிழ மரக்கன்றுகளை நடவுசெய்து பராமரிப்பதற்காக என மொத்தம், 24 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் காசோலையை, புகழூர் நகராட்சி பொறியாளர் மலர்கொடியிடம், டி.என்.பி.எல்., பொது மேலாளர் கலைச்செல்வன் வழங்கினார்.முதன்மை பொது மேலாளர்கள் நாகராஜன், பானுபிரசாத், ரங்கராஜன், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Sep-2024