உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாநில சிறுபான்மை-யினர் ஆணையம் சார்பில், கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதன் பின், அவர் கூறியதாவது:மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில், 319 உறுப்பி-னர்கள் பதிவு செய்துள்ளனர். 151 பயனாளிகளுக்கு, 7.82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச சைக்கிள், வக்ப் நிறுவ-னங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு, புதிய இரு சக்கர வாகனம் வாங்க இரு பயனாளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய்- மானி-யமும் வழங்கப்பட்டுள்ளது. மின்மோட்டாருடன் கூடிய விலை-யில்லா தையல் இயந்திரங்கள், 100 பயனாளிகளுக்கு, 5.56 லட்சம் மதிப்பிலும், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 295 பயனாளிகளுக்கு, 1.89 லட்சம் ரூபாய் மதிப்பில் எண்ணற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்-கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட, தனி நபர் கடன், சிறு வணிக கடன் மற்றும் கல்வி கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படு-கிறது.இவ்வாறு கூறினார்.கூட்டத்தில், மாநில சிறுபான்மையின ஆணையர் சம்பத், கலெக்டர் தங்கவேல், எம்.பி., ஜோதிமணி உள்பட பலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி