உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு உற்பத்தி மையமாக பொது குடிநீர் குழாய்கள்

கொசு உற்பத்தி மையமாக பொது குடிநீர் குழாய்கள்

கரூர்: கொசு உற்பத்தி இடமாக, பொது குடிநீர் குழாய்கள் அமைந்துள்ள இடங்கள் மாறி வருகின்றன.தமிழகத்தில் மழை காரணமாக, பல்வேறு வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பல பகுதிகளில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்-டுள்ள பொது குடிநீர் குழாயில், போதுமான வடிகால் வசதி இல்-லாமல், தண்ணீர் தேங்கி நிற்கிறது. மரத்தடியில் தான் பொது குழாய்கள் இருக்கின்றன. குழாய்களை சுற்றி தொட்டி போல் அமைக்கப்பட்டு உள்ளதால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்-மூலம் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. பொதுகு-டிநீர் குழாய்கள் அருகே, தண்ணீர் தேங்கி நிற்காதவாறு நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ