மேலும் செய்திகள்
பயனற்ற நிலையில் கழிப்பிடம்
12-May-2025
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, வடக்கு தெரு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பலரின் வீடுகளில் கழிப்பிடம் வசதி இல்லை. கழிப்பிடம் கட்ட வசதி இல்லாத, கூலி வேலை செய்து வரும் இவர்கள் நங்காஞ்சி ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே அசுத்தமாக இருக்கும் நங்காஞ்சியாற்றில், காலை கடனை கழிப்பதால், மேலும் அசுத்தமாகி அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நங்காஞ்சி ஆற்றிற்கு செல்லும் பாதையில், பொது கழிப்பிடம் கட்ட இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும், கழிப்பிட வாக்குறுதிக்கு எப்போது தான் முடிவு வரும் என, வடக்கு தெரு மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
12-May-2025