நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி பணி மாநகராட்சியில் மும்முரம்
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதியில், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, ஈரோடு சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகலாக சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள், கால்நடைகளை கடித்து வருகின்றன. சாலைகளில் உள்ள தடுப்புச்சுவரின் இடைவெளி வழியாக, திடீரென குறுக்கே ஓடும் நாய்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கு-கின்றனர்.இந்நிலையில் மாநகராட்சி சார்பில், நகரம் முழுவதும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு பணி நடந்து வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவ பிரிவினர் இணைந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்-றனர். முதலில் வலை கொண்டு தெரு நாய்கள் பாதுகாப்பாக பிடிக்கப்படுகின்றன. பின் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்-தப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்டதற்கான அடையாளமாக, ஒவ்வொரு நாயின் உடலில் கலர் சாயம் மூலம் குறி வைக்கப்படு-கிறது. இதனால், ஏற்கனவே தடுப்பூசி போட்ட நாய்கள் மீண்டும் பிடிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்த பணி நகரின் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' மாநக-ராட்சி பகுதிகளில், 9,027 நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்-டுள்ளது. தற்போது வரை, 550 நாய்களுக்கு தடுப்பூசி போடப்-பட்டுள்ளது. நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசி, ஓராண்டு காலம் வீரியத்தன்மை கொண்டதாக இருக்கும். ஓராண்டு முடிந்-ததும் மீண்டும் ஊசி செலுத்தப்பட வேண்டும்,' என்றனர்.