மேலும் செய்திகள்
கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்
1 minutes ago
பைக் திருடிய மெக்கானிக் கைது
1 minutes ago
கூட்டுறவு சங்க பணியிடம் வரும் 26ல் நேர்முக தேர்வு
2 minutes ago
வேலைவாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை
10 minutes ago
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. ஆனால், கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, பல இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல், 4:30 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெங்கமேடு, திருமாநிலையூர், திருகாம்புலியூர், தான்தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது.கரூர் மாவட்டத்தில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.அரவக்குறிச்சியில்...அரவக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில், நேற்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ, தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. பல நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago
10 minutes ago