மேலும் செய்திகள்
உளுந்து பயிர் செழிப்பு
20-Dec-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், இரவு நேரங்களில் மழை பெய்ததால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்காம்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, சரவணபுரம், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, இரும்பூதிப்பட்டி, சிவாயம், லட்சுமணம்பட்டி, சேங்கல், கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது. இதனால், சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது.வரகூர், மேட்டுப்பட்டி பகுதிகளில் மழை நீர் வடிந்து செல்லும் வழித்தடங்களில், அதிகமான மழை நீர் தேங்கியதால், வயல்களில் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மழை நீரை வெளியேற்றும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும் மானாவாரி நிலங்களிலும் மழை நீர் தேங்கியதால் சோளம், உளுந்து பயிர்கள் பாதி அளவு தேங்கியது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர்.
20-Dec-2024