ரயில்வே குகை வழி பாதையில் மழைநீர் தேங்கியதால் அவஸ்தை
குளித்தலை: குளித்தலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மருதுார் ரயில்வே குகை வழி பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், அந்த வழியே சென்ற பொதுமக்கள் தடுமாறினர்.குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்-தினம் இரவு மழை பெய்தது. இதனால் மருதுார் குகை வழி பாதையில் மழை தண்ணீர் தேங்கியது. மருதுார், பணிக்கம்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை-யாக இந்த குகை பாதை உள்ளது. குகை வழி பாதையில் மழை தண்ணீர் தேங்கியதால், இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமப்பட்டனர்.ரயில்வே குகை வழி பாதையில் தேங்கிய மழை நீர் மற்றும் தண்ணீர் ஊற்று நீரை, உடனுக்குடன் வெளியேற்றி பாதிப்பு ஏற்ப-டாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.