உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் சிறுபாசன கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி

குளித்தலையில் சிறுபாசன கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி

குளித்தலை, குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று 7வது சிறு பாசன கணக்கெடுப்பு மற்றும் இரண்டாவது நீர் நிலை கணக்கெடுப்பு புத்துாட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.சப் - கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் விஜயா, குளித்தலை கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கரூர் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் மயில்சாமி பங்கேற்று, 7வது சிறு பாசன கணக்கெடுப்பு மற்றும் இரண்டாவது நீர்நிலை கணக்கெடுப்பு, கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மற்றும் குளம், குட்டை சம்பந்தமான நீர் நிலை கணக்கெடுப்பு, மற்றும் பணி முன்னேற்றம் சம்பந்தமாகவும், பணிகளை துரிதப்படுத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.பயிற்சியில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர்கள் குளித்தலை சிவக்குமார், கடவூர் நிவேதா, தோகைமலை சக்திவேல் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகா ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ