உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நத்தமேடு ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

நத்தமேடு ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

கரூர், கரூர்-கொடுமுடி செல்லும் நெடுஞ்சாலையில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஆபத்தான வளைவில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.கரூரிலிருந்து இருந்து, கொடுமுடி செல்லும் நெடுஞ்சாலையில் குந்தாணிபாளையம் நத்தமேடு பஸ் ஸ்டாப் அருகில், ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வழியாக பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், டூவீலர்கள் என தினமும் செல்கின்றன.சில நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படுகிறது.இப்பகுதியில் விபத்துகளை தடுக்க, வேகத்தடை அமைக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் பலனில்லை.ஆபத்தான வளைவு வழியாக இங்குள்ள அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் சாலையை அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இனியாவது விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை