உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

மூக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

கரூர்: கரூரில் இருந்து மூக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில், வாகன ஓட்டிகள் நலன் கருதி கூடுதலாக வேகத்தடை அமைக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர் - -திண்டுக்கல் சாலை, வெள்ளியணை செல்லும் சாலை யில், வெங்ககல்பட்டி மேம்பாலம் இறக்கத்தில் இருந்து இடது-புறம் மூக்கணாங்குறிச்சி போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. குறுகலாக உள்ள இந்த சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாக-னங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையில் அதிகளவு வளைவு பகுதி உள்ள நிலையில், வேகத்-தடை அமைக்காத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சாலையில் வளைவு பாதைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்-டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை பார்-வையிட்டு தேவையான இடத்தை பார்வையிட்டு வேகத்தடை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி