உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் பீதி

கரூர் அருகே குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் பீதி

கரூர் அருகே குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் பீதிகரூர், நவ. 5-கரூர் அருகே, சாலையில் குப்பை கொட்டப்பட்டதால், துர்நாற்றம் வீசுகிறது.கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் பொன்வேல் நகரில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த, சில நாட்களாக பொன்வேல் நகரில் சாலையில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பை சாலையில் சிதறுகின்றன. மழை காரணமாக, குப்பையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ஆண்டாங்கோவில் சாலை பொன்வேல் நகரில் சாலையில் உள்ள குப்பையை அகற்ற, ஆண்டாங் கோவில் கிழக்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை