உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு பெற்ற பஸ் டிரைவரின் குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்

ஓய்வு பெற்ற பஸ் டிரைவரின் குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்

குளித்தலை, குளித்தலையில், ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதமானது.குளித்தலை, மணத்தட்டை கடை வீதியில் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற டிரைவர் கோபால், 65, என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த குடிசை வீட்டில் நேற்று காலை 11:45 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.இதையறிந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குளித்தலை எஸ்.ஐ.,சரவணகிரி, கவுன்சிலர் சந்துரு ஆகியோர், முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் வீட்டிலிருந்த பீரோ, மின்சாதன பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள், இணைப்புகளை துண்டித்து அப்பகுதியில் மேலும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தீ விபத்துக்கான காரணம் குறித்து, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி