நெல் விதைக்கும் பணி: விவசாயிகள் ஆர்வம்
கரூர் :கரூரில், சம்பா சாகுபடிக்கு நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும், 36 ஆயிரத்து, 700 ஏக்கர் நெல் சாகுபடி நடக்கிறது. அமராவதி, காவிரி ஆற்று பாசன பகுதிகளிலேயே சம்பா சாகுபடி நடக்கிறது. பல ஆண்டுகளாக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காதது காரணமாக, மாற்று பயிர் சாகுபடிக்கு சென்று விட்டனர். இதனால் சம்பா சாகுபடி பரப்பு, மெல்ல, மெல்ல சரிந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் மேட்டூரில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், இலக்கை மிஞ்சும் அளவில் சம்பா சாகுபடி நடக்கும் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில், விவசாயிகள் வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டு, விதை நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வயல்களில் விதைக்கப்பட்ட விதை நெல்லை பாதுகாக்க, விவசாயிகள் பகல் நேரம் முழுவதும் கண்காணித்து, சப்தம் மற்றும் சில்வர் தட்டில் ஓசை எழுப்பி பறவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின், நாற்றுகள் பறித்து நடவும் பணிகளை துவங்க உள்ளனர்.