உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்

அரவக்குறிச்சியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்

அரவக்குறிச்சி:காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிவுற்றதால், சாலை அமைக்கும் பணிக்காக மண் மேடுகளை அகற்றும் பணி நடக்கிறது.பள்ளப்பட்டியில் இருந்து, அரவக்குறிச்சி செல்லும் சாலையில், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், பணி முடிந்து ஆறு மாதமான நிலையில், தோண்டப்பட்ட மண்ணை மேடு போல் சாலையில் குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில், மண் மேடுகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்தவுடன், சாலை மறு சீரமைக்கும் பணி துவங்க உள்ளது. இந்நிலையில் இச்சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு, இரண்டு இடங்களில் காணப்படுவதால், சாலை போடுவதற்கு முன்பாக, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும்படி, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை