உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செவ்வந்தி லிங்கம் தலைமையில், செல்லாண்டிப்பாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், 41 மாத பணிக்காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டும், நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், சாலை பணியாளர்களுக்கு, 10 சத-வீத ஆபத்துபடி, சீருடை, நிரந்த பயணப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, பொரு-ளாளர் சிவக்குமார், மாவட்ட இணை செயலாளர் முத்துமாரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்-பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ