உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வட்டார பகுதிகளில் பனை கிழங்கு விற்பனை

கரூர் வட்டார பகுதிகளில் பனை கிழங்கு விற்பனை

கரூர், நவ. 20-தொடர் மழை காரணமாக, கரூர் மாவட்ட த்தில் பனை கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கரூர் வட்டார பகுதிகளில் பனை கிழங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.தமிழகத்தில், மார்ச் முதல் மே வரை நுங்கு சீசன் களை கட்டும். அப்போது, கோடைக்காலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், நுங்குக்கு கடும் கிராக்கி இருக்கும். ஆனால், சீசன் காலத்தில் பனை மரத்தில் இருந்து நுங்கை வெட்டி, விற்பனை செய்ய விவசாயிகளால் முடியவில்லை. மரத்தில் நுங்கு பழுத்து, பனை பழமாக மாறி கீழே விழும் அதன் விதைகளை, பனை கிழங்காக மாற்ற விவசாயிகள் பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்தனர்.கடந்த இரண்டு மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்ததால், பனை கிழங்கு விளைச்சல் பரவலாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரூர் நகரம் மற்றும் வட்டார பகுதிகளில், ஒரு பனை கிழங்கு மூன்று முதல், ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உடலில் இரும்பு சத்து, நார்ச்சத்துகளை அதிகப்படுத்தும், பனை கிழங்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை