உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் மல்லிகை மகசூல் பாதிப்பு

சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் மல்லிகை மகசூல் பாதிப்பு

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மல்லிகை பூக்களில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் காரணமாக, மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கணம், எழுதியாம்பட்டி, திருக்காம்புலியூர், தாளியாம்பட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மல்லிகை பூக்கள் சாகுபடிக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது மல்லிகை பூக்கள் செடிகளின், மொட்டு பகுதிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் பரவி வருவதால், பூக்கள் பூப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளில் குறைவான பூக்களே பூத்து வருகின்றன. மல்லிகை பூக்கள் மகசூல் பாதிப்பு காரணமாக, விவசாயிகளுக்கு வருமானம் குறைந்துள்ளது.எனவே, விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பூச்சி விரட்டுதல் குறித்து, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என, பூ விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி