உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

நெடுஞ்சாலை ஓரங்களில்மரக்கன்றுகள் நடும் பணிஅரவக்குறிச்சி, நவ. 8-நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.அரவக்குறிச்சியில் இருந்து, சின்னதாராபுரம் செல்லும் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. அரவக்குறிச்சி உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி நேரில் பார்வையிட்டு துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை