கரூர் : கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது.கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. வேடசந்துாரில் சட்டசபை தொகுதியில், 1,480 ஓட்டுப்பதிவு இயந்திரம், 370 கட்டுப்பாட்டு இயந்திரம், 401 வாக்காளர் அளித்த ஓட்டுக்களை சரிபார்க்கும் இயந்திரம், அரவக்குறிச்சி தொகுதியில், 1,212 ஓட்டுப்பதிவு இயந்திரம், 303 கட்டுப்பாட்டு இயந்திரம், 308 வாக்காளர் அளித்த ஓட்டுக்களை சரி பார்க்கும் இயந்திரம், கரூரில், 1,284 ஓட்டுப்பதிவு இயந்திரம், 312 கட்டுப்பாட்டு இயந்திரம், 338 வாக்காளர் அளித்த ஓட்டுக்களை சரிபார்க்கும் இயந்திரம்.கிருஷ்ணராயபுரத்தில், 1,218 ஓட்டுப்பதிவு இயந்திரம், 312 கட்டுப்பாட்டு இயந்திரம், 338 வாக்காளர் அளித்த ஓட்டுகளை சரிபார்க்கும் இயந்திரம், மணப்பாறையில், 388 ஓட்டுப்பதிவு இயந்திரம், 421 கட்டுப்பாட்டு இயந்திரம், 401 வாக்காளர் அளித்த ஓட்டுக்களை சரிபார்க்கும் இயந்திரம், விராலிமலையில், 1,224 ஓட்டுப்பதிவு இயந்திரம், 306 கட்டுப்பாட்டு இயந்திரம், 331 வாக்காளர் அளித்த ஓட்டுக்களை சரிபார்க்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.இந்த ஆறு சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 8,000 ஓட்டுப்பதிவு இயந்திரம், 2,000 கட்டுப்பாட்டு இயந்திரம், 2,167 வாக்காளர் அளித்த ஓட்டுக்களை சரிபார்க்கும் இயந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பின், ஓட்டு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரிக்கு சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் நேற்று முன்தினம் இரவு முதல் கொண்டு வரப்பட்டது.அவ்வாறு கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள், முறையாக சட்டசபை தொகுதி வாரியாக கணினியில் பதிவு செய்யப்பட்ட பின்னர், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் முன்னிலையில், தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படுவதையும், இரவு முழுவதும் இருந்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் ஓட்டுப்பதிவு தணிக்கை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது.