உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இடைநிலை ஆசிரியர் போக்சோவில் கைது

இடைநிலை ஆசிரியர் போக்சோவில் கைது

குளித்தலை:குளித்தலை அருகே, அரசு உயர்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி திரு.வி.க., அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், 230க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் பாலியல் குற்றம் நடப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றது.இதன் அடிப்படையில் கடந்த, 23ம் தேதி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பள்ளியில் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் சிவக்குமார், ஆறாம் வகுப்பு மாணவியரிடம் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. குளித்தலை அனைத்து மகளிர் போலீசில், மாணவியர் தரப்பில் புகார் தரப்பட்ட நிலையில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், ஆசிரியர் சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை