உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது

பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், வீரணம்பட்டி கரிச்சிபெட்டி குளம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு வந்த தகவல்படி, நேற்று முன்தினம் மாலை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பணம் வைத்து சூதாடிய வீரணம்பட்டியை சேர்ந்த தேவேந்திரா, 42, பழனி முருகன், 52, சிவக்குமார், 47, ஆகியோரை கைது செய்தனர்.இதேபோல், தாராபுரத்துனுாரில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய கோவக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், 55, மாணிக்கம், 45, சிவா, 53, ராஜேந்திரன், 47, ஆகிய நான்கு பேரை மாயனுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை