உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் கால்வாய் துார் வார கோரிக்கை

கழிவுநீர் கால்வாய் துார் வார கோரிக்கை

கரூர், கரூர் அருகே, சின்ன குளத்துபாளையம் பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. சாக்கடையில் செடிகள், பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீர் வாய்க்காலில் செல்லாமல், சாலையில் ஓடுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, மழை காலம் தீவிரமடைவதற்குள், கழிவுநீர் சாலையில் ஓடுவதை தடுத்த நிறுத்த, சாக்கடையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை