கரூர் விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான போட்டி
கரூர், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், தான்தோன்றிமலை குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. குறுவட்டத்தை சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.நிகழ்ச்சியில், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், துணை மேயர் தாரணி சரவணன், பசுபதி பாளையம் செயின்ட் மேரிஸ் பள்ளி தலைமையாசிரியர் பத்திநாதன், உடற்கல்வி ஆசிரியர் ஜான் ஜுடு ஜோசப் உள்பட பலர் பங்கேற்றனர்.